தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மெண்டிஸ் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததை அடுத்து புலனாய்வுப் பிரிவு பிரதானி சிசிர மெண்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.