in ,

குருநாகல் வைத்தியருக்கு எதிரான குற்றச்சாட்டும், பின் வாங்கும் சிங்களத் தாய்மார்களும்….

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள், தம்மை சோதனையிடுவதற்கு உடன்படவில்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட படையினர் உற்பட அதிகாரிகள் மிகுந்த பதற்றத்திற்குள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது.

கடந்த வருடங்களில் குருநாகல் வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த பின்னர், தாம் கருத்தரிக்கவில்லையென பல பெண்கள் முறையிட்டிருந்தனர். சுமார் 800 வரையான பெண்கள் நேற்று முன்தினம் வரை வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறையிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், முறைப்பாடு பதிவு செய்த பெரும்பாலான பெண்கள், சோதனைக்கு சம்மதிக்கவில்லை. 69 பெண்கள் மாத்திரமே பரிசோதனைக்கு சம்மதித்திருந்தனர். இப்பொழுது அவர்களில் பலரும் தயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்தரிக்காமைக்கு தம்பதியர்களிடம் எதேனும் குறைபாடு இருக்கிறதா என்ற பரிசோதனையும் செய்யப்படவுள்ளதையடுத்தே, பெரும்பாலான பெண்கள் பின்வாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
-Copied –

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள அரபு எழுத்துக்கள் அல்குர்ஆனின் சில வரிகளே…

“என் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் அனைத்தும் போலியானவை – ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு