in ,

முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள அரபு எழுத்துக்கள் அல்குர்ஆனின் சில வரிகளே…

மட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்துமாறு அலி ஸாஹிர் மௌலானா M.P . பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள்…..

முஸ்லிம்களது வாகனங்களில் காணப்படும் அல்குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில போக்குவரத்து பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் , அவற்றை அகற்றுவதற்கான கால அவகாசங்களையும் வழங்கி வருவதாக தமது கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பெரேரா அவர்களை தொடர்பு கொண்டு தமது அதிருப்தியினை வெளியிட்டதுடன் , இவ்வாறான விடயம் தொடர்பில் அரசினால் எவ்வித சட்ட அறிவுறுத்தல்களும் இதுவரை முறையாக வழங்கப்படாத நிலையில் சிலர் நடைமுறைப்படுத்த முற்படுவது ஏற்புடையதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இங்கு குறிப்பிடப்படும் வாசகங்கள் முஸ்லிம் மக்கள் உயர்வாகவும் , கண்ணியமாகவும் , புனிதமாகவும் கருதுகின்ற அல் குர்ஆனில் உள்ள வசனங்களே ஆகும் , அவர்களது மார்க்க ரீதியான நம்பிக்கை சார்ந்த விடயங்களுக்கு அரசினால் எவ்வித தடைகளும் விதிக்கப்படாத நிலையில் , மட்டக்களப்பில் இவ்வாறான புதிய நடைமுறை ஒன்று அமுலுக்கு வருவது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக் கொண்டார் .

அத்துடன் பெரும்பாலான மதங்கள் சார்ந்த போதனைகள் , அம்மதங்கள் சார்ந்த முக்கிய கருத்துக்கள் பிற மொழிகளிலேயே காணப்படுகின்றன , உதாரணமாக பாளி , மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ளவற்றை குறிப்பிடலாம் , அதே போன்றே இஸ்லாமிய மத சார்ந்த விடயங்கள் அரபு மொழியில் காணப்படுகின்றன , அவ்வாறான ஒரு புனிதமான குர்ஆன் வாசகத்தையே சில முஸ்லிம்கள் தமது வாகனங்களில் பொறித்துள்ளனர் , இவைகள் வன்முறைகளை தூண்டுவதாகவோ , நிந்தனை செய்வதாகவோ இல்லை , சாந்தி சமாதானம் , அன்பு , இறையச்சம் என்பவற்றை போதிப்பதாகவே இவை உள்ளன, இதனை அகற்ற கோருவதும் , அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயல்வதும்  ஒரு பொருத்தமற்ற விடயமாகவே நான் கருதுகிறேன் என அவர் மேலும்  குறிப்பிட்டார்.

இது தொடர்பில் உடன் கவனம் செலுத்துவதாக  குறிப்பிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பெரேரா அவர்கள் , உடனடியாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும் , இவ்வாறான சம்பவங்கள் ஏதும் இடம் பெற்றால் அது தொடர்பில் உடன் தனக்கு தெரியப்படுத்துமாறும் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சாய்ந்தமருதில் பலியான பயங்கரவாதிகளின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன

குருநாகல் வைத்தியருக்கு எதிரான குற்றச்சாட்டும், பின் வாங்கும் சிங்களத் தாய்மார்களும்….