பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக அத்துரலிய ரத்ன தேரர் நாடகமொன்றை அரங்கேற்றியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அத்துரலிய ரத்ன தேரர் என்பவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவருக்கு அரசியல் நோக்கமொன்று உள்ளது. அவர் நாட்டில் அரசியல் செய்கின்றார்.
எமக்கு அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனையோ அல்லது வேறு யாரையுமோ பாதுகாக்க வேண்டிய தேவை ஒருபோதும் இல்லையெனவும் அவர் மேலும் கூறினார்.
-DC-