in ,

குருநாகல் வைத்தியரின் சட்டவிரோத கருத்தடை சாத்தியமானதா?

தமிழில் : Dr விஷ்ணு சிவபாதம்

இன்று இலங்கையில் அதிகம் பேசு பொருளாக இருப்பது 21/04 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப்பின் ஏற்பட்ட அசாதாரண நிலைமையாகும். அந்த வகையில், குருநாகல் வைத்தியசாலை முஸ்லீம் வைத்தியரொருவர் ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்கு சட்டவிரோதமாக நிரந்தரக் கருத்தடை சிகிச்சையைச் செய்தார் என்ற சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைப்பற்றி பேராசிரியரும் மகப்பேற்று நிபுணரும் ஆகிய Prof ஹேமந்த சேனாநாயக்க அவர்கள் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் தமிழாக்கம் இது.

நான் மேற்குறிப்பிட்ட பேராசிரியருடன் 2012/2013 காலப்பகுதியில் உள்ளக வைத்தியராகக் கடமையாற்றியவர் என்ற வகையில் அவருடைய திறமையிலும் அனுபவத்திலும் எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையுமுள்ளது.

இப்பேராசிரியர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகப்பேறுப் பிரிவில் பகுதித்தலைவரும், இலங்கை மகப்பேற்று வைத்திய நிபுணர் சங்கத்தின் முன்னாள் தலைவருமாகும்.

“இந்தக்கருத்தடை சம்பந்தமான குற்றச்சாட்டு மிகவும் சாத்தியமற்றது. ஏனென்றால், மற்ற வைத்தியர்களின் பிரசன்னத்தில் தவறுதலாக ஒரு சிசேரியன் சத்திர சிகிச்சை செய்வதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. மேலும், பலோப்பியன் குழாயானது, சாதாரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சையின் போது வெளியில் தெரிவதில்லையென்பதாலும், அதைச் சேதப்படுத்துவதற்கு கைகளை வயிற்றினுள் உட்செலுத்த வேண்டுமென்பதாலும் அவ்வாறு நடைபெறுவதற்கு சாத்தியமில்லை.

இந்தக்குற்றச்சாட்டானது, முறையாகவும் விரைவாகவும் விசாரிக்கப்படாத இடத்தில், இது இலங்கையின் மகப்பேற்று வைத்தியத்துறையில் சர்வதேச மட்டத்தில் பாராட்டப்படக்கூடியளவில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளுக்கு ஒரு எதிர்மறையான விளைவைக் கொடுக்கும்.

இன்று இலங்கையில் 99 வீதமான பிறப்புக்கள் வைத்தியசாலைகளில் நடைபெறுகின்றது. இந்நிலையில், இந்தச்செய்தியால் மக்கள் வைத்தியசாலையில் குழந்தை பெறுவதற்கு பயப்படக்கூடியதொரு சூழ்நிலையை உருவாக்கும்.

மேலும், இன்று இலங்கையில் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறுமளவு அதிகரித்துக்கொண்டு வருகிறது. தற்பொழுது 39 வீதமான பிரசவமானது சத்திர சிகிச்சை மூலமே நடைபெறுகிறது. அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் போன்ற வளர்ந்த நாடுகளில் இதைவிடக் குறைந்தளவான விகிதாசாரத்திலேயே சிசேரியன் சிகிச்சை செய்யப்படுகிறது.

பலோப்பியன் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதென்பதை இரண்டு விதமான பரிசோதனைகள் மூலம் நாங்கள் அறிந்து கொள்ளலாம்

1. எக்ரே படம் எடுப்பதன் மூலம்
2. லப்ராஸ்கோப்பி (Laparoscopy) பரிசோதனை மூலம்

இந்தக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு மருத்துவ நிர்வாகப்பிரிவினரைவிட மகப்பேற்று வைத்தியத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே தலைமை தாங்க வேண்டும். இது ஏற்கனவே தேசிய ரீதியாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமென்பதால், உள்ளக விசாரணையை விட தேசிய ரீதியான விசாரணையே சாலச்சிறந்ததாகும். இந்த விசாரணையை மேற்கொள்வதற்குரிய போதுமான மனித வளம் எம்மிடமுள்ளது.

மேலும், இந்தக்குற்றச்சாட்டு குறித்து விரைவான வெளிப்படைத்தன்மையான ஒரு விசாரணை நடைபெற்று, உண்மைகள் கண்டறியப்பட்டு, அதற்குரிய தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எனவே, பொது மக்கள் எப்போதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளிலேயே கவனஞ்செலுத்த வேண்டும். அவர்கள் உணர்ச்சிகளுக்கும் வதந்திகளுக்கும் ஏற்ப முடிவுகளை எடுக்கக்கூடாது.

-Copied –

https://www.thehotline.lk/archives/36357

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அமைச்சர் மங்கள சமரவீரவும் ராஜினாமா செய்ய துணிந்தாரா..?

முஸ்லிம்களற்ற அமைச்சரவையால் நொந்து போன பிரதமர்….