இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், வைத்தியர் ஒருவரின் விசாரணை தொடர்பில் திரும்பத்திரும்ப அதே கேள்விகளைக் கேட்ட சந்தர்ப்பத்தில் சிங்கள மருத்துவர் ஒருவருடைய விவகாரமாக இருந்தால் இப்படி துடிப்பீர்களா? என அமைச்சர் ராஜித சேனாரத்ன அந்த ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த நபர் சொத்துக்குவிப்பு விவகாரத்திலேயே கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் மருத்துவத் துறையில் அவர் அநீதி இழைத்திருக்கின்றாரா என்பதை அறிய ஸ்ரீலங்கா மருத்துவர் கௌவுன்சிலின் உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-SN-