in ,

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பத் தயாராகும் எதிர்கட்சி.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வழி உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அரசாங்கத்திலுள்ள கிறிஸ்தவ அமைச்சர்கள் எவரும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக மாட்டார்கள். அவ்வாறு எதிர்த்தால், அவர்களது சமூகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும்.
இந்த நிலைமையினால் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. சுட்டிக்காட்டினார்.
நாடு முகம்கொடுத்துள்ள நிலைமையை கருத்திற் கொண்டு, அரசாங்கத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே மிக முக்கியமான தேவையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   
-Daily Ceylon – 

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

2020ம் ஆண்டில் தரம் ஒன்றுக்கான மாணவர்களின் விண்ணப்பப்படிவம் நாளை முதல்…

தவணைப் பரீட்சைகளில் கவனம் செலுத்துங்கள் – கல்வி அமைச்சு அறிவிப்பு