
கொவிட் தொடர்பான நாளொன்றுக்கான இறப்பு எண்ணிக்கை 51 ஆக குறைவடைந்துள்ளது. மொத்த கொவிட் இறப்பு எண்ணிக்கை 12,731 ஆக கணிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு மாதங்களின் பின்னர் பதிவான மிகக்குறைந்த தினசரி இறப்பு எண்ணிக்கையாக இது கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மூன்று மாதங்களில் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகக் குறைந்த தினசரி கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 983 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (NW)