in ,

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் அமைதி ஆர்ப்பாட்டம்….

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கும் அதனைத் தொடர்ந்து மே  மாதம் 13ம் திகதி நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளையும் கண்டித்து 2019.05.23 “இன்னுமொரு யுத்தம் வேண்டாம்”  ‘சிங்கள ,தமிழ், முஸ்லிம் மக்கள் இனவாத மதவாத மரணப்பொறியில் அகப்படாமல் இருப்போம்’ எனும் தொனிப்பொருளில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கலஹா சந்தியில் தீவிரவாதத்திற்கும், இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்களால் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில்  சிங்கள, தமிழ் ,முஸ்லிம் என்ற ரீதியில் சகல மாணவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மூவின மக்களும் புரிந்துணர்வோடும், ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர் என்பதனை சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதாகவும் இந்த அமைதிப் பேரணி அமைந்திருந்ததுடன் பேராதனைப் பல்கலைக்கழகம் தொடர்பில் பல போலிப் பிரச்சாரங்களை ஏற்படுத்திய சகலருக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும் முகமாக இது விளங்கியது.

தகவல்
எம் ஜே துவான் காசிம்,
பேராதனைப் பல்கலைக்கழகம்

.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பிரதமருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன்?

பதுரலிய பாடசாலைக்கு அருகில் 13 கைக்குண்டுகள் மீட்பு.