in ,

விக்டோரியா நேர்த்தேக்கத்தில் விழுந்த லொறி

மஹியங்கனை, கண்டி பிரதான வீதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் லொறி ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறிப்பிட்ட பிரதான பாதையில் உள்ள மொரகஹமுல பாலத்தில் 1500 கோழிகளை ஏற்றி வந்த லொறி மோதியதாகவும், அதன் பின்னர் நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்ததாகவும் லங்கதீபா செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவத்தில் லொறியின் சாரதி இறந்து விட்டதாகவும், கோழிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெல்தெனிய பொலிசார் தெரிவித்தனர். சாரதி மில்லகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை லொறி கோழிகளை ஏற்றிக்கொண்டு கம்பளைக்கு பயணிக்கின்ற நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைகள்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகிறது புதிய விலை