பொதுபலசேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் வாரங்களுக்குள் விடுவிக்கப்படலாம் என பொதுபல சேனா அமைப்பு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
ஞானசார தேரரை விடுவிப்பதற்கான ஆவணங்கள் சில தற்போது ஜனாதிபதி செயலகத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் விதாரன்தெனிய நந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்,
அண்மையில் ஞானசார தேரர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-CAPITAL NEWS-