முஃப்தியின் மொரோக்கான உத்தியோகபூர்வ விஜயம் தனிப்பட்டதல்ல!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி அவர்கள் மொரோக்கோ நாட்டுக்கு பத்து நாள் உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் மூன்று நாட்களிலேயே நாடு திரும்பினார். திடீரென கடந்த 13 ஆம் திகதி மினுவங்கொடை மற்றும் அதனைச் சூழுவுள்ள பிரதேசங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை அறிந்ததுமே அவர் தமது நிகழ்ச்சி நிரல்களை இடைநடுவில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார்.
மொரோக்கோவில் வருடாந்தம் நடைபெறும் அல்-துறூஸ் அல்-ஹஸனிய்யா அல்-றமழானிய்யா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே அந்நாட்டு மன்னரின் அழைப்பின் பேரில் முஃப்தி அங்கு சென்றிருந்தார். குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பல விரிவுரை மற்றும் பயான் நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மூன்று நாட்களில் நாடு திரும்பினார்.
மேலும் நிகழ்ச்சியில் அந்நாட்டு இளம் ஹாபிழ் ஒருவரும் உலகில் பழைமை வாய்ந்த ஜாமிஆ பாஸின் மஸ்ஜிதில் முஃப்தியின் தலைமையில் கௌரவிக்கப்பட்டார்.
இதே நிகழ்ச்சியில் சென்ற வருடமும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அஷ்ஷேக் ரிஸ்வி முப்தியின் பக்கத்திலிருந்து….