இலங்கையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்ட போதும் VPN செயலி பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.இவ்வாறு இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறிய மூவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர் .சட்டவிரோத ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனினும் பொலிஸாரினால் முஸ்லிம் மக்களிடம் இலஞ்சம் பெறுவதாகவும், அதனை காட்டி கொடுப்பதாகவும் பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தகவல் பரப்பப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மாத்தறை பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமகாலத்தில் பேஸ்புக் உட்பட சமூகவலைத்தங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் VPN பயன்படுத்தி இந்த சந்தேக நபர்கள் இந்த தகவலை அனுப்பியுள்ளனர்.