in ,

ஏறாவூரில் காருக்கு தீ வைப்பு : பதற்றமில்லை

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள காரொன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி வரும் SMS, அவரை மிரட்டுவதாக வந்துள்ளதோடு, சென்ற மாதம் அவரது கார் இன்ஜினுக்குள் சீனி அள்ளிப்போட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இது விடயமாக ஏற்கனவே ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாக கார் உரிமையாளர் தெரிவித்தார். நேற்று மாலையும் அவரை பயமுறுத்தும் SMS வந்ததாகவும் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டு வாசலில் போடப்பட்ட காருக்குள் வெடிப்புச்சத்தம் கேட்டு கதவைத்திறந்த போது இருவர் ஓடிச்செல்வதைக் கண்டுள்ளார்.

குறிப்பு
விடயத்தைச் சரியாக விளங்காது சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாறுவதை தயவு செய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.

தகவல் – நஸீர் ஹாஜி

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அமைச்சர் மனோ கணேஷனின் கருத்தில் திருப்தியில்லை

VPN பாவனையாளர்களே… அவதானம்…