
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லிற்கு 70 ரூபா விலையை நிர்ணயிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், கரிம உர பாவனை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் உர நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கரிம உர பாவனையினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை வௌியிடும் வரையில் பயிர்ச் செய்கையில் இருந்து விலகிக் கொள்வதாக விவசாயிகள் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரசாயன பசளையை பெற்றுத்தருமாறு கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த விவசாயிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.
இதேவேளை, உரப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வினை முன்வைக்காத பட்சத்தில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைக்க தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – CN