in ,

ரயில்கள் சேவை தொடர்பில் வெளியானது புதிய அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை ரயில்கள் செயற்படுத்தப்பட மாட்டாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் நாளை முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கபடும் என ரயில்வே திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஊழியர்களின் கோரிக்கை நேற்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை ரயில் சேவை முன்னெடுக்கப்படமாட்டாது என சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் சேவைகள் ஆரம்பிக்கும் பட்சத்தில் 128 முதல் 130 வரையான ரயில் சேவைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ள நிலையில் மாகாணத்திற்குள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபம் ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டியிலிருந்து புறப்படும் ரயில் குறைந்தளவு வேகத்தில் ரம்புக்கனை வரை செயற்படுவதுடன் தெமட்டகொட வரை தொடர்ச்சியாக இயக்குவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -CN-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நெல் தொடர்பில் வெளியானது ஜனாதிபதியின் அறிவிப்பு

அமைச்சர் நாமல் ராஜபக்ச – பௌத்த பிக்குகள் குழுவோடு இந்தியா பயணம்