in ,

அமைச்சர் நாமல் ராஜபக்ச – பௌத்த பிக்குகள் குழுவோடு இந்தியா பயணம்

இந்தியாவின் 29ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் விமான நிலையம் இன்று (20) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விசேட விருந்தினா்களாக இலங்கையைச் சேர்ந்த சிலரும் பங்குப்பற்றவுள்ளனா்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் 100 பௌத்த மத குருமார்கள் உள்ளிட்ட குழுவினா் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளனர்.
குஷிநகர் விமான நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்கான முதலாவது விமானமாக யூல்.எல். 1147 என்ற விமானம் இன்று காலை 5.20 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்பட்டது.

இலங்கையிலிருந்து பயணித்த குறித்த விமானம் தற்போது இந்தியாவை அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ரயில்கள் சேவை தொடர்பில் வெளியானது புதிய அறிவித்தல்

12 மணி நேர மின்வெட்டு அமுலாகலாம்- சம்பிக ரணவக