
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் நாட்டில் 12 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால், நாட்டின் மின்சார உற்பத்தியில் 45 சதவீத அளவு இழக்கப்படும். இதனால் 12 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கைக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த எண்ணைய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (CN)