in

மீண்டும் விமான சேவைகள் ஆரம்பம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 5 புதிய விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பலனாகவே இவ்வாறு 5 நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, நவம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் சுவிட்சர்லாந்தின் எடில்வயிஸ் (Edelweiss) விமான சேவை நிறுவனம், டிசம்பர் மாதத்திற்குள் ரஷ்யாவின் எயாரோ ப்லோட் விமான சேவை நிறுவனம், பிரான்சின் எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனம், ரஷ்யாவின் எயார் அசுர் நிறுவனம் ஆகியனவே இவ்வாறு விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கடுமையான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இவ்வாறான விமான சேவைகளை முன்னெடுப்பதன் ஊடாக தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இளைஞர் ஒருவரை காவு கொண்ட காத்தான்குடி விபத்து

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் நிறைவடைந்துள்ளன