in

நியமனம் பெறுகிறார் ஷெர்மிளா ராஜபக்ஷ

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஷெர்மிளா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2020 ஜூன் வரை ஜனாதிபதி செயலகத்தில் சமூக ஊடகத் தலைவராக ஷெர்மிளா ராஜபக்ஷ பணியாற்றியுள்ளார்.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஷெர்மிளா ராஜபக்ஷ இன்று (28) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டெம்பர் மாத தொடக்கத்தில் பதவி விலகிய முன்னாள் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்கிரமசிங்கவிற்கு பதிலாக ஷெர்மிளா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை 2010 மற்றும் 2015 க்கு இடையில் இடம்பெற்ற யானை கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இஷினி விக்கிரமசிங்க பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -NW-

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

எச்சரிக்கை விடுக்கும் இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கம்

துமிந்த சில்வா விடுக்கும் சவால்