Local News

அல் முஸ்தஃபா பல்கலைக்கழகம் செல்லுபடியற்றது

அல் முஸ்தஃபா பல்கலைக்கழகம் செல்லுபடியற்றது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செந்தில் தொண்டமானுக்கு கடிதம்.

ஊவா மாகாணத்தில் தமிழ் மாணவர்களுக்கு அரபு மொழி கற்பித்தமைக்காக விமர்சிக்கப்பட்ட அல் முஸ்தஃபா பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெறாதது என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பல்கலைக்கழம் ஊவாவில் பாட நெறியை நடத்துவதற்கு உயர் கல்வி அமைச்சின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

மேலும் இந்த பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பட்டம், இலங்கையில் அரச பதவிகளைப் பெறுவதற்கு ஏற்புடையதா? என்பதிலும் சந்தேகம் வெளியாக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆவணங்களை ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கொழும்பில் வைத்து வெளியிட்டார்.

அதேநேரம், தங்களுக்கு பலவந்தமாக இந்த பல்கலைக்கழகம் அரபி மொழியை கற்பிக்கவில்லை என்று அதில் கற்கும் மாணவர்கள் கூறியதாக செய்திகள் கிடைத்தன.

-விக்னேஷ்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button