
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 566 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 564 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இருவரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 41 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 92 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 ஆயிரத்து 787 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 17 உயிரிழப்புகள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 11 ஆண்களும், 6 பெண்களும் உயிரிழந்துள்ளமை இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் பதிவு செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -CN-