in

எல்ல – பசறை வீதி மூடப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக எல்லயிலிருந்து நமுணுகல வழியாக பசறை செல்லும் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக பசறை – நமுணுகல பகுதியில் மரங்கள் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனவே, சாரதிகள் பசறை – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர். – DC-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

பதவி உயர்வு பெறுகிறார் திருமதி பரீனா கலீல்