in

பதவி உயர்வு பெறுகிறார் திருமதி பரீனா கலீல்

மாத்தளை சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி பரீனா கலீல் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்துக்கு கல்விச் சேவை ஆணைக்குழுவால் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை ஆணைக்குழு இந்நியமனத்தை வழங்கியுள்ளது.பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான இவர் பயிற்றப்பட்ட ஆசிரியரும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா பட்டதாரியுமாவார்.

1984 ஆம் ஆண்டு மா/குரிவல ஹமீதியா மகா வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 1987 ஆம் ஆண்டு வரை அங்கு சேவையாற்றி, பின்னர் மா/உக்குவல அஜ்மீர் தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று 2017ஆம் ஆண்டு வரை அப்பாடசாலையில் 30 வருடங்கள் தொடர்ந்து சேவையாற்றியுள்ளார். அங்கு கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது 2010 ஆம் ஆண்டு இடம் பெற்ற அதிபர் தரம் 2க்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதே பாடசாலைக்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மாத்தளை சாஹிரா கல்லூரிக்கு 2017 ஆம் ஆண்டு முதல் இடமாற்றம் பெற்று அங்கு பிரதி அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

எல்ல – பசறை வீதி மூடப்பட்டுள்ளது

பஹல கொரகோயாவில் பெற்றோர்களின் அமைதிப் போராட்டம்