
நாடளாவிய ரீதியில் நடைபெறும் அதிபர், ஆசிரியர்கள் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நேற்று புதன்கிழமை (03.11.2021) காலை 9.00 மணியளவில் நுவரெலியா மாவட்டம், கொத்மலை வலயம், பஹல கொரகோயா அல் அரபா முஸ்லிம் வித்தியாலயத்தில் ஊர் மக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களினால் ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது
இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தாதே, மொத்த தேசிய வருமானத்தில் கல்விக்கு 6 % ஒதுக்கு, தரமான கல்விக்கு உடனடி தீர்வு வழங்கு,ஜோன் கொத்தலாவல திட்டத்தை நிறைவேற்றாதே, எமது அதிபர், ஆசான்கள் சம்பள முரண்பாட்டை தீர்த்து வை, 24 வருட சுபோதினி திட்டத்தை செயல்படுத்து மற்றும் எமது பிள்ளைகளின் உரிமையை பறிக்காதே போன்ற கோஷங்களை தாங்கி வந்தது.
-Ashfa shareef (UOP)-