in

மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி

அங்கு நொச்சிய கிராமத்தில் மாபெரும் மென்பந்து சுற்றுத் தொடர்; அனைவருக்கும் அன்பான அழைப்பு.

முஹம்மட் ஹாஸில்

அங்கு நொச்சிய, TRY STAR விளையாட்டுக் கழகமும், இளைஞர் கழகமும் இணைந்து நாடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுத் தொடர் இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 13,14,15 ம் திகதிகளில் அல்மாஸ் மஹா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் மிக விமர்சையாக நாடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அங்குநொச்சிய கிராமத்தினது ஒற்றுமையை வெளிக்காட்டும் முகமாக இந்த APL (அங்குநொச்சிய பிரீமியர் லீக்) சுற்றுப் போட்டியை ஹொரவ்பொத்தான மண்ணிற்கு முதல் முதலாக அறிமுகப்படுத்தியதில் TRY STAR விளையாட்டுக் கழகமும், இளைஞர் கழகமும் பெருமிதம் அடைகின்றது.

இம்முறை அங்குநொச்சிய பிரீமியர் லீக்(APL ) சுற்றுப் போட்டியானது வித்தியாசமான, அழகான முறையில் மக்களின் பூரண அனுசரணையிலும் ஒத்துழைப்பிலும் இன்ஷா அல்லாஹ் இடம் பெற இருக்கின்றது.

13ம் திகதி காலை 9 மணியளவில் சம்பிரதாய முறையில் அங்கு நொச்சிய பிரீமியர் லீக் ஆரம்பிக்கப்பட்டு 15ம் திகதி மாலை பரிசளிப்பு மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விஞ்ஞானம் சொல்லும் உண்மை….

பண்டிகைக் காலங்களில் ஏன் முஸ்லிம் கடைகள் பகிஷ்கரிக்கப்படுகிறது?