in ,

கிண்ணியா வைத்தியசாலையில் நடந்தது என்ன?

கிண்ணியா வைத்தியசாலையில் குழந்தை பிறப்பின் போது நடந்தது என்ன.?

திருகோணமலை, கிண்ணியா தள வைத்தியசாலையில் குழந்தை ஒன்றின் உடல் இரண்டாக பிரிந்து பிறந்த சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

39 வயதுடைய கர்ப்பிணிப் பெண் காதர் மஹ்மூதா, மகரூப் நகரை சேர்ந்தவர் நேற்றிரவு கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரசவத்தின் போது குழந்தை தலை வேறாகவும், உடல் வேறாகவும் பிரிந்து பிறந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கிளினிக் சென்ற போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரசவத்திற்கு 24ஆம் திகதி நாளும் குறித்துக் கொடுக்கப்பட்டநிலையில் குறித்த பெண்ணிற்கு சம்பவ தினத்திற்கு முன்னைய இரவு குழந்தை பிரசவிப்பதற்கான வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்தே கிண்ணியா தள வைத்தியசாலையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசவத்தின் போது உடல் வேறாகவும், தலை வேறாகவும் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், குழந்தை ஒரு கிழமைக்கு முன் இறந்துள்ளது என வைத்தியசாலை நிர்வாகத்தினர் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில்,
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஒரு கிழமைக்கு முன்னர் குழந்தை இறந்திருந்தால் பிரசவ வலி எப்படி நேற்றிரவு வந்திருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிள்ளையின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜே.பிரோஸ்கான்
கிண்ணியா பிராந்திய செய்தியாளர்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

விஞ்ஞானம் சொல்லும் உண்மை….

மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி