in

LoveLove

பானகமுவ, அந்நூர் தேசிய பாடசாலையில் புதிய அதிபர் காரியாலயம்

-சப்ராஸ் அபூபக்கர்-

குருநாகல் மாவட்டம், பானகமுவ அந்நூர் தேசிய பாடசாலைக்கான பிரமாண்டமான அதிபர் காரியாலயம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேசத்தின் பிரமிப்பாய் இருந்த இந்த பாடசாலை அண்மையில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதோடு பாடசாலையின் கம்பீரத்தன்மைக்கு குறையாக இருந்த அதிபர் காரியாலயமும் பூரணப்படுத்தப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் முழுமையான அனுசரணையிலேயே இந்தக் கட்டிடம் பாடசாலைக்காக வழங்கப்பட்டிருந்தது.

திறப்பு விழா பாடசாலையின் அதிபர் A. S. M. இர்ஷாத் தலைமையில் நடைபெற, விஷேட அதிதியாக பாடசாலையின் பழைய மாணவரும், சட்டத்தரணியுமான ரிப்கி காஸிம் கலந்து சிறப்பித்திருந்தார். இதேவேளை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ரஹீம், உப தலைவர் ரஸ்மி, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் A. R. M. நிஸாம் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பாடசாலைக்கான நீண்ட நாள் தேவையாக இருந்த இந்த அதிபர் காரியாலயம் முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் காட்சியளிக்கின்றமை பூரண உளத்திருப்தியைத் தருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்திருந்த நிலையில் பழைய மாணவர் சங்கத்தை நன்றியோடு நினைவு படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கல்வி, கல்வி சார்ந்த பல விடயங்களில் பானகமுவ, அந்நூர் தேசிய பாடசாலை சாதனைகள் பலவற்றை படைத்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பாஸ்கரலிங்கத்தின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு TISL கோரிக்கை

கிண்ணியா பிரதேசத்தில் துக்க தினம் அனுஷ்டிப்பு