
மகாவலி ஆற்றில் நேற்றிரவு கார் ஒன்று கவிழ்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டி – குருதெனிய வீதியில் வேகமாகச் சென்ற வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளமையாலேயே சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று காலை வரை ஆற்றில் வீழ்ந்த கார் கண்டுபிடிக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. (NW)