in

அறபு மொழி சம்பந்தமான விசேட விரிவுரை

தபால்,தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம் சமய அலுவல்கள் பிரிவின் ஏற்பாட்டில் நாட்டில் உள்ள அறபு மத்ரஸாக்கள்

மற்றும் கல்வி நிலையங்களின் அறபு மொழி விருத்தியை இலக்காகக் கொண்டு “அரபு மொழியும் அதனை கற்பிக்கும் வழிமுறையும்” என்ற தலைப்பில் விஷேட விரிவுரையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் தொடர்பான கௌரவ அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் அவர்களின்  தலைமையில்  நடபெறவுள்ளதோடு அந்த நிகழ்வில் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் அவர்களின் அழைப்பையேற்று விஷேட விரிவுரையை நிகழ்த்துவதற்காக சவூதி அரேபியாவில்  அமைந்துள்ள அறபு மொழி முன்னேற்றத்திற்கான மன்னர் அப்துல்லாஹ் சர்வதேச நிலையத்தின் அரபு மொழி கற்பித்தல் நிபுணர் கலாநிதி மஹ்தீ பின் முஹம்மத் அல் அம்மார் அவர்கள் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வானது  2019.04.03ம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.00 மணி வரை கொழும்பு 10, டீ.ஏ விஜேவர்தன மாவத்தயில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வைத்திய தெளிவூட்டல் கருத்தரங்கு

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவர்களின் சாதனை