in

ஈஸ்டர் தாக்குதல், இன்னுமொருவர் கைது

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 25 வயதுடையவர் எனவும் அவர் ஹிங்குல பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை சிட்டிகுளம் பகுதியில் தாக்குதல்களின் தலைவன் சஹரான் ஹாசிம் நடத்திய பயிற்சி மற்றும் விரிவுரைகளில் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

அவர் ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேண உதவியவர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை TID மேற்கொள்ளும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தல்துவா தெரிவித்தார். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முதலாவது ஒமிக்ரொன் தொற்றாளர் இலங்கையில்

பிரதமருடனான முக்கிய கூட்டம் இன்று