in

இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கும் ருமேனியா

இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான ஒரு வருட காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ருமேனியாவுக்கு தொழில்வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்கள் குழுவொன்றுக்கு விமான டிக்கட்களை வழங்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

ருமேனியா பணிக்காக தற்போது வரை சுமார் 800 பேரின் பட்டியல் தூதரகத்திடம் இருப்பதாகவும் அவர்களும் எதிர்காலத்தில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் பணியாளர்களின் நடத்தை மற்றும் திறனைப் பொறுத்து ஒரு வருட ஒப்பந்தத்தை மேலும் நீடிக்க வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை ருமேனிய வேலைகளுக்காக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெரும் தொகையை அறவிடுவதாக வெளியான தகவல்கள் தவறானவை எனவும், ருமேனிய வேலைகளுக்காக பதிவு மற்றும் நிர்வாகக் கட்டணம், விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணங்களை மாத்திரமே அறவிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (DC)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்

அதிகரித்தது முட்டையின் விலை