in

புத்தளத்தில் அநுர குமாரவின் “தீர்வு”

“சீரழியும் தேசத்தைக் கட்டியெழுப்பும் தீர்வு” என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி (NPP) நாடு தழுவிய ரீதியில் நடத்தும் ‘கலந்துரையாடல் சார்ந்த மக்கள் சந்திப்பு’ தொடரின் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான அமர்வு, தே.ம.ச தலைவர் அனுர குமார திசாநாயக்க (தலைவர் – ஜேவிபி) தலைமையில் 2022.01.15 (சனிக்கிழமை) மாலை 2.30 முதல் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தளம் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த புத்தளம் நகரம், முல்லிபுரம், மணல்தீவு, சிராம்பியடி, வண்ணாத்திவில்லு, கரைத்தீவு-பொன்பரப்பி, கல்பிட்டி, அக்கரைப்பற்று, மதுரங்குளி, முந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நகழ்வுக்கு சமூகமளித்திருந்தனர்.

வரவேற்புரையை நிமல் பதிரன (ஜேவிபி – புத்தளம் தொகுதி அமைப்பாளர்) நிகழ்த்தினார். பேராசிரியர் சந்தன அபேரத்ண (தே.ம.ச – புத்தளம் மாவட்ட அமைப்பாளர்) தே.ம.ச.யின் தீர்வுத் திட்டம் பற்றிய அறிமுகத்தை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அனுர திசாநாயக்க அவர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது.
சமூகமளித்தவர்கள் வினவிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கங்களை வழங்கியிருந்தார்.

-ஹிஷாம் ஹுஸைன்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த தம்மை அர்ப்பணித்த ஊழியர்களை கெளரவிக்கிறது ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம்

அதிகரிக்கிறது கொரோனா தொற்று