in

அதிகரிக்கிறது கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 672 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 97 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 68 ஆயிரத்து 506 ஆக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 13 ஆயிரத்து 970 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 231 ஆக உயர்வடைந்துள்ளது. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

புத்தளத்தில் அநுர குமாரவின் “தீர்வு”

குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா