in

LoveLove

குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா

-ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர் –

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்கம் (ITAK) 2022.01.19 நேற்று புதன்கிழமை தன்னுடைய பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. நிகழ்வுகள் குருநாகல் Dine Hut வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ITAK எனும் இந்த சங்கதத்தினுடைய ஆளுநர், முன்நாள் தலைவர் ரயீஸ் ஹாஜியார் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. 2022 நடப்பு வருடத்துக்கான தலைவர், செயலாளர்,பொருளாளர் தெரிவும் நேற்றைய நிகழ்வில் இடம் பெற்றன.

2018 ஆம் ஆண்டிலிருந்து அமைப்பின் தலைவராக Singapore Tele Shop நிறுவனத்தின் உரிமையாளர் அதான் ஹாஜியாரும், செயலாளராக அல் அக்கீம் நிறுவனத்தின் உரிமையாளர் ஹஸ்ஸான் ஹாஜியாரும், பொருளாளராக DenimSmart நிறுவனத்தின் உரிமையாளர் இர்பான் ஹாஜியாரும் கடமை புரிந்து வந்த நிலையில் நேற்றைய தினம் 2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுத்தெரிவு இடம் பெற்றது.

அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான அமைப்பின் தலைவராக Orbit Electronics நிறுவனத்தின் பணிப்பாளர் கியாஸ் ஹாஜியாரும், செயலாளராக IMax நிறுவனத்தின் உரிமையாளர் ரிஸ்வான் அவர்களும், பொருளாளராக DenimSmart நிறுவனத்தின் உரிமையாளர் இர்பான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் சகல உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அதே வேளை சங்கத்தின் யாப்பு முன் வைக்கப்பட்டு ஒரு சில மாற்றங்களும் முன் மொழியப்பட்டிருந்தது. அதேபோன்று இனி வருகின்ற காலங்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல சேவைகளை இந்த சங்கம் செய்ய முன் வர வேண்டும் என உறுப்பினர்கள் சார்பாக கருத்துக்களும் முன் வைக்கப் பட்டிருந்தன.

இதேவேளை 2018 ஆம் ஆண்டு நிர்வாகத்தை பொறுப்பேற்றவர்கள் கொவிட் கால சிரமமான காலப் பகுதியிலும் பல்வேறு பட்ட சமூகம் சார்ந்த செயற்திட்டங்களை முன் கொண்டு நடாத்தினார்கள் என ஆவணப் படம் மூலம் ஆதாரங்கள் முன் வைக்கப் பட்டிருந்தன.

2022 ஆம் வருடத்தை இந்த அமைப்பின் ஸ்மார்ட் வருடமாக பிரகடனப் படுத்தி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது. பத்து வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் பல்வேறு சேவைகளை சமூகத்துக்கு செய்ய எல்லோரும் ஒற்றுமையாய் கரம் கோர்ப்பதாகவும் சகல உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கான இராப்போசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு ITAK அமைப்பின் பத்தாண்டு நிறைவு விழாவை பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அதிகரிக்கிறது கொரோனா தொற்று

சிகரம் தொடும் ஆரிஹாமம் Bright சர்வதேச கல்லூரி