in

சிகரம் தொடும் ஆரிஹாமம் Bright சர்வதேச கல்லூரி

-ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர்-

குருநாகல் மாவட்டத்தில் ஆங்கில மொழியுடனான கல்வி நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களை கடந்த பல வருடங்களாக ஆரிஹாமம் Bright சர்வதேச கல்லூரி புரிந்து வருகிறது.

2006.01.16 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆங்கில மொழி மூலமான கல்லூரி 2022 ம் ஆண்டு தனது கல்வி நடவடிக்கையின் 16 வது வருடத்தை நிறைவு செய்கிறது. இந்த 16வது வருட நிறைவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கிடையிலான இல்ல விளையாட்டுப் போட்டியொன்றை அண்மையில் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

கல்லூரியின் பணிப்பாளர் அல்ஹாஜ் நசீர் சேர் தலைமையில் நடைபெற்ற இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக உலகின் மிக உயரமான வலைப்பந்து வீராங்கனை தரஞ்சனி சிவலிங்கம் கலந்து சிறப்பித்திருந்தார்.

பொதுவாக ஆரிஹாமம் பிறைட் கல்லூரியின் அத்தனை நிகழ்ச்சிகளும் புதுமையான நிகழ்ச்சிக்கான மகுடம் சூட்டுபவைகளே. அந்த வகையில் 2022 ம் ஆண்டு நடாத்தப்பட்ட இந்த இல்ல விளையாட்டுப்போட்டி பலராலும் பரவலாகப் பேசப்பட்டதோடு அயற்பாடசாலை அதிபர்கள் மூலமும் மனம் திறந்து பாராட்டப்பட்ட ஒரு நிகழ்வாக அமைந்திருந்தமை விஷேட அம்சமாகும்.

இதேவேளை இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர்கான் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா

நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு மாணவர் விடுதி