
மின்வெட்டைத் தவிர வேறு தீர்வு கிடைக்காத நிலையில், மின்வெட்டு மேற்கொள்வது தொடர்பில் இன்று அறிக்கை வெளியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள Sojitz மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் தடை காரணமாக இன்று காலை முதல் செயலிழந்துள்ளது.
தற்போதைய நிலமைக்கு ஏற்ப ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டுமென மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மின்வெட்டு முறை தொடர்பில் இன்று அறிவித்தல் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (NW)