
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ஒன்றிற்கு விடையளிக்க மன்னாரில் மாணவர் ஒருவருக்கு உதவிய ஆசிரியர் ஒருவரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார், மடு பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கு வினாத்தாளுக்கு பதிலளிப்பதற்காக ஆசிரியர் வட்ஸ்அப் மூலம் விடைகளை அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவன் பரீட்சை கண்காணிப்பாளர்களால் பிடிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (15) மன்னார் அடம்பன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, குறித்த பாடசாலையில் கடமையாற்றிய பரீட்சை மண்டபத்தின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் மற்றும் இரு ஆசிரியர்களையும் பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக தனி பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மன்னார் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பரீட்சை திணைக்களம் மற்றும் மடு வலயக் கல்வி அலுவலகமும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (NW)