in

AngryAngry CuteCute LoveLove

கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் இன்னுமொரு வெற்றிப்படி ஆரம்பம்


-சப்ராஸ் அபூபக்கர்-
குருநாகல் மாவட்டம், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நடப்பாண்டிலிருந்து தொடர்ச்சியான இரண்டு ஆண்டுகளுக்கான பழைய மாணவர் சங்க உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (2022.03.05) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ரிசாத் சேர் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் பாடசாலையின் முன்நாள் அதிபர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பாடசாலையில் கற்ற பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கொவிட் கால அச்சுறுத்தல் காலப்பகுதியிலும் கடந்த வருடங்களில் கடமை புரிந்த பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் வீரியமான செயற்பாடுகள் தொடர்பில் தான் மன மகிழ்ச்சி கொள்வதாக அதிபர் தலைமை உரையில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் கெகுணகொல்ல தேசிய பாடசாலை குறுகிய காலப்பகுதியில் எல்லா வளங்களும் பூர்த்தி செய்யப்பட்ட சிறந்த பாடசாலையாக அபிவிருத்தி அடைய வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும், அதற்காக பழைய மாணவர்கள் தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அதிபர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
நிகழ்வின் இறுதியில் தொடர்ச்சியான இரண்டு ஆண்டுகளுக்கான பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு இடம்பெற்றது. இதில் 20 உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டதோடு பழைய மாணவர் சங்கத் தலைவராக தொடர்ச்சியாக அதிபரே பதவியிலிருப்பதாகவும் முன் மொழியப்பட்டது.
இறுதியாக கலந்து கொண்ட பழைய மாணவர்களுக்கான மதிய போசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை நாட்டில் ஏற்பட்டு இருக்கும் அசாதாரண சூழ்நிலையிலும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்த தூரப் பிரதேச பழைய மாணவர்களை அதிபர் நன்றியோடு தனது உரையில் நினைவு படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பரீட்சை எழுதும் மாணவர் ஒருவர் கைது, மன்னாரில் சம்பவம்

தரவு பாதுகாப்பு மசோதாவின் பாரதூரமான சிக்கல்கள் தீர்க்கப்படாத வரை மசோதா நிறைவேற்றப்பட கூடாது