in

ஏப்ரலை வரவேற்றது பாதிக்கப்பட்டவர்களின் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்குச் செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும், அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மிரிஹான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 க்கும் அதிகமானோர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதலின் போது ஒரு போலீஸ் பஸ், 1 போலீஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டுள்ளதோடு ஒரு தண்ணீர் பீரங்கி லொரியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 பத்திரிகையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மிரிஹானவில் இடம்பெற்ற நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத அமைப்பு இருப்பதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் வன்முறையான முறையில் நடந்து கொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொட பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இன்று காலை 05 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருள் கோரி மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு – புத்தளம் பிரதான வீதி மதுரங்குளியில் இன்றைய தினம் இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவைபோன்ற பல்வேறு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பிறைநிலா மீடியா யூடியுப் சனலை Subscribe செய்து இணைந்து கொள்ளுங்கள்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தரவு பாதுகாப்பு மசோதாவின் பாரதூரமான சிக்கல்கள் தீர்க்கப்படாத வரை மசோதா நிறைவேற்றப்பட கூடாது

நானும் VPN பாவிக்கிறேன், டிஜிட்டல் அமைச்சர்