in

பிறைநிலாவின் கூற்றுப் பேசினால் மட்டுமே ஊற்றுப் பேனா முகம் மலரும்!…

கவிதாயினி பெனாசில் சிப்னா (ஏறாவூர்)
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

சொற்களின் பட்டறைக்குள்ளே
சொக்கிடும் சொற்கள் பொறுக்கி
கவி செப்பிடும் பிறைநிலாவிற்கு இன்றைய தினம் பிறந்தநாள்

உந்துகின்ற கற்பனையில்- எங்கள்
கவிதைகளில் பந்து விளையாடும்
பல சொற்கள் -இவற்றை
சிந்து படிப்பதற்கிணங்க மக்கள்
சிந்தையில் விரைந்தோடும் பிறைநிலாவிற்கு இன்றைய தினம் பிறந்தநாள்

புதுமை சொல்ல ஒரு புதுக்கவிதை
தமிழ் மணக்கவொரு மரபுக் கவிதை
கலை வணங்கவொரு வசன கவிதை
வண்ணம் சிறக்கவொரு மணிக் கவிதை
என சிக்கிடும் சிந்தனைகளுக்குள்ளே கவி உள்ளங்களின் சொத்தாய் மின்னும் பிறைநிலா எனும் வரக் கவிதை!

காற்று பேசினால் மட்டுமே மலருக்குக் காது கேட்கும்
நாற்று பேசினால் மட்டுமே மருதம் கண்விழிக்கும்
ஏற்றுப் பேசினால் மட்டுமே பச்சை வயல் பாய் விரிக்கும்
பிறைநிலாவின் கூற்றுப் பேசினால் மட்டுமே ஊற்றுப் பேனா முகம் சுழிக்கும்.

அணைந்த சுடரினைச் சுற்றி நிற்கும்
ஐதரோ காபன் ஆவியைப் போல நாங்கள் புனைந்த கவிதையினை சுவைத்து நிற்கும் பிறைநிலாவிற்கு இன்றைய தினம் பிறந்த நாள்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

உணரப்படும் ஊடகத்தின் தேவையும், பிறைநிலா ஊடகத்தின் பங்கும்.

வளரும் முழு வட்டமே வாழ்த்துனக்கு…