in

LoveLove

வளரும் முழு வட்டமே வாழ்த்துனக்கு…

கவிதாயினி: இம்திஸா ஹஸன் றௌஸான்
மருதமுனை
அபிவிருத்தி உத்தியோகத்தர்(மத்தியஸ்தம்)

பிறை நிலா ஊடகமே
பிறந்த உனக்கு ஆறு வருட அரங்கேற்றமா?
ஆகட்டும் ஆகட்டும்
ஆனந்தம் கொண்டோம்
அளவில்லாத அளவில்…

மக்கள் செவிகளில்
செய்திகள் கொண்டு சேர்க்கும் செம்மை உனக்கு…

ஆர்வமுடையோரை ஆற்றல்கள் வெளிக்கொணரச் செய்யும் அரவணைப்பு கண்டோம் உன்னில்…

மாசற்ற மொழி கொண்ட
இளம் தலைமுறைக்கு செய்தி வாசித்தல் வரமளித்தாய் நீ…

மார்க்க கருத்துக்களை
மாண்போடு வழங்க
அறிஞர்களை அடையாளப்படுத்தும்
ஆதரவு செய்தாய்…

புதுமைகள் புகுந்திருக்கும் இடம் தேடி திறமைகள் திரட்டும் திடம் செய்தாய்…

நோன்பை நோக்கமுள்ளதாக்க கேள்விகள் கொண்டு வெகுமதி வழங்கும் நல் உள்ளம் கொண்டாய்…

ஆர்ப்பரிப்பற்ற அடக்கமான ஆதரவளிக்கும் அறிப்பாளர்களும் உனக்கு பலம் கொண்டாய்…

இன்னும் பல சுவைகள் சொல்ல சொற்கள் பத்தவில்லை சுரக்கிறது சேவைகள்…

இன்னும் பற்பல பாராட்டுகள் பெற வேண்டும்
எம் தேசம் தாண்டி
பார் தோறும் பயணிக்க வேண்டும்…

மக்கள் தேவைகள்
மனம் சார்ந்த சேவைகள்
எத்திசையும் ஒலிக்க
ஏந்துவோம் கரங்களை நாம்…

பிறைநிலாவே நீ நீடூழி வாழ வேண்டும்
ஆறு அறுபதாகி
அறுபது அறுநூறாகி
ஆள வேண்டும் என்று…

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பிறைநிலாவின் கூற்றுப் பேசினால் மட்டுமே ஊற்றுப் பேனா முகம் மலரும்!…

இரும்பும் கரங்களில் உதித்த பிறைநிலாவே…