in

இரும்பும் கரங்களில் உதித்த பிறைநிலாவே…

கவிஞர்: சப்ரான் நஜீர்

இற்றைக்கு ஆறாண்டுக்கு முன்
இப்புவியிலே உதித்தது
இலங்கை முஸ்லிம்களின்
இன்னுமோர் இதயத்துடிப்பு…..

ஈழத்து தாயின்
ஈடுஇணை அற்ற பிள்ளைகள்
ஈகை மனம் கொண்டவர்கள்
ஈட்டிகளற்ற காயத்தில் திளைத்தவர்கள்…

அரசியல் சாக்கடைகள்
அரியாசனம் ஏற
அறிவிலி பெரும் சமூகத்தினை
ஆட்கொண்டு செய்தது சூழ்ச்சி…

சூரிய ஊடகத்தின் துவேஷ பங்கில்
சத்தம் இல்லாமல் தெரனவும் இணைந்து
சக்தி வழங்கியது
சிறுபான்மை உரிமை மீறல்களில்…

குரல்கள் உயர்ந்தது எமக்
குரிய ஊடகம் வேண்டுமென்று
குரல் சப்தத்திற்கு மட்டுமே பழக்கப்பட்ட
கலப்பட சமூகமும் நம்பியிருந்தது…

இருட்டில் கிடைத்த
இரண்டு அங்குல தீபம் போல்
இறையருளால் தனியொருவனின்
இரும்புக்கரங்களில் உதித்தது பிறைநிலா…

பிறைகண்டு நோன்பு பிடி
பிறைகண்டு விடு
பிறையுடனே பழக்கப்பட்டு
பிறைநிலா ஊடகத்தின்
பயணமும் ஆரம்பித்ததுவே….

பிறைநிலாவின்
பிறந்த நாள் வாழ்த்துக்களை
பரந்த மனதுடன்
பதிவிடுகிறேன்…….

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வளரும் முழு வட்டமே வாழ்த்துனக்கு…

உன் புகழ் நம் தேசமெங்கும் பரவட்டும்!