in

OMGOMG

என் கவிதைகள் கடித்துத் தின்பதற்கல்ல!

-புத்தளக் கவியரசி
ஸெய்னப் றிஸ்வி-

ஆளுக்கு ஆள் பெயரெடுத்து
அடுக்கடுக்காய் புகழெடுத்து
அவனியிலே பவனி வரும்
அரசியல் கதாநாயகர்களே!

அனைத்து வளமும் கொண்டது இலங்கை!
ஆனால் …… தற்பொழுது,
பிற நாடுகளில் தஞ்சம் புக வேண்டிய நிலைமை!
எம் தாய் நாட்டு மக்களுக்கு ஏன் இந்தக் கொடுமை!
இதையெல்லாம் உங்களிடம் தட்டிக்கேட்க எனக்குண்டு உரிமை!

வயிற்றுப் பசிக்கு மக்கள் கைநீட்ட
ஆறுதலாய் பணத்தை நீட்டுகிறது உம் அரசியல்!
இதற்கிடையில் தினமும் போராடிப் போராடியே கலைத்துப் போகிறது எம் வாழ்க்கை!

பூவுக்குள் ஓர் பூகம்பமா?
உம் அரசியலில் இத்தனை ஓட்டைகளா?

ஆம், ஆசை காட்டி ஓட்டை விற்று
மாளிகை கட்டுகிறது சுரண்டும் இனம்!

ஒற்றைப் போர்வைக்கு வழியின்றி கட்சிக் கொடியில் பதுங்குகிறது தெருவோர இனம்!

எதிர்த்து நிற்கும் எதிர்க்கட்சியின் மேல் பழி போட்டு…
கலவரத்தை தூண்டுகிறது ஆளும்கட்சி!

இதில் கைதியாகி!……
சிறைக் கைதியாகி நிற்கிறது – எம்
எதிர்காலம்!
பின்தங்கி போகிறது இலங்கையின் பொருளாதாரம்!

பல வண்ணப் பூக்கள் நிறைந்த பூங்காவாய்,
பல் கலாசாரம் கொண்ட இலங்கையும்…
செழிப்புற்று நிற்காமல்
சலிப்படைந்து போனது தான் ஏனோ?

இனியும் தாமதிக்காமல்……
இன,மத வேறுபாடின்றி நாமெல்லாம் ஒன்றிணைய வேண்டும்!
எம் தாய் நாட்டினை கட்டிக்காக்க வேண்டும்!
விருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்ற வேண்டும்!
இதற்கு இன்றிலிருந்தே புறப்பட வேண்டும்!

என் கவிவரிகள் கடித்துத் தின்பதற்கோ
கருத்துக்களை முடக்கி எரிவதற்கோ அல்ல!
எம் நாடு!….
எம் தேசம்! …..
என பற்றை பற்றிப் பிடிப்பதற்கும்,
உணர்வு பெறுவதற்குமே!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

புத்துயிர் பெறும் இலங்கைக்கு அத்தியவசியமான ஊழலுக்கெதிரான சீர்திருத்தங்கள் தொடர்பில் பதினைந்து அம்சத் திட்டம்

நீயே என் நேசம்