in

CuteCute LoveLove

நீயே என் நேசம்

-பாத்திமா மிப்லா, களுத்துறை-

என்னையே எனக்குப்
பிடிக்காத போதெல்லாம்
நீ தந்த நேசமே
என்னையும் எனக்கு
நேசிக்க வைத்தது…
வேதனைகள் என்னை
தத்தெடுத்தபோது
என் அன்பே
உன் நேசமே
என்னை அரவணைத்துக்கொண்டது

அணுவணுவாய் வாழ
நான் முடிவெடுத்ததும்
அதற்கு உன் நேசமே சரியான வழியென்றும்
நான் எண்ணியது
என் நேசமே
நீ என்னை
நேசித்த போதுதான்…..

அதனால்தான்
இவ் உலகமும்
அழகானது…
நானும் அழகானேன்….
ஆகவே நீயே என் நேசம்…
உன்னை நான் நேசிக்கிறேன்
என்று நான் உணறும்
ஒவ்வொரு நொடியும்
என் அன்பே
நான் புதிதாய்
மலர்கின்றேன்…
மழைத் தூறல்களையும்
தென்றலின் சாரல்களையும்
என்னுள் நான்
காண்கின்றேன்….

உன் நேசம் நான் பெற
நான் ஏதும் தவம்
செய்யவில்லை.
தவமின்றிக் கிடைத்த வரம்
நீயே என் நேசம்……

நட்சத்திரங்கள் தூவிய
பாதைகளிலே
என் நேசமே
உன் கைகோர்த்தபடி
நடந்து செல்கின்றேன்…
அவ் வானமும் நமக்காய்
பூத்தூரல்களைத்
தூவுகின்றது..
தொடரட்டும் உன் நேசம்
நீயே என் இனிய நேசம்…..

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

என் கவிதைகள் கடித்துத் தின்பதற்கல்ல!

என் முற்றத்து முருங்கை மரம்