Poem

என் முற்றத்து முருங்கை மரம்

-சுகன்யா, வவுனியா-

பச்சை பாம்பு படம் எடுத்தது போல தொங்க விடும் ஒரு அழகு

ஆண்டாண்டு காலம் கடந்தும் கடந்திடாத பல கதைகள் அது சொல்லிடும்

சுற்றங்கள் பல சூழ்ந்து பல கதைகள் கதைத்து மகிழ்ந்து இன்பக் கடலில் மூழ்கிய காலத்தையும்

கண்டித்தளும் தண்டித்தலும்
நல்வாழ்வின் வழி என அறிவுரை கூறும் 60 வயது தாத்தாவையும்

வாய் சிவக்க வெற்றிலை யும் பொக்கை வாய் சில மொழிகளும்
கதை பேசி களைப்பாறும்
பாட்டியையும்

மழலை மொழி பேசி கள்ளமில்லா உள்ளத்தோடு களங்கமில்லா மனதுடனும் சுற்றித் திரிந்த என் சிறுவயது காலத்தையும்

என் முற்றத்து முருங்கை அருகில் ஒரு கனம் நினைத்துப் பார்க்கின்றேன்

பலகோடி ஞாபகங்கள் என் கண்முன்னே தோன்றி கொண்டிருக்கின்றன

கால ஓட்டத்தில் கலைந்துபோன கனவுகளும் சிதைந்துபோன உறவுகளும்

போரின் கொடூர தாண்டவத்தில் விரட்டப்பட்ட என் உறவுக் கூடுகள்

எத்தனையோ ஆண்டுகள் சென்று விட்டன இருந்தும்ஆறாத ரணங்களை ஆற்றுகின்றது பழைய கால நினைவலைகளை என் முற்றத்து முருங்கை மரம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button