in

LoveLove

என் மொத்தமும் நீயே!…

-கவிதாயினி பெனாசில் சிப்னா, ஏறாவூர்-

என் மொத்தமும் நீயே என்பதை
நித்தமும் நினைக்க வைக்கிறாய்
யாரின் இடத்தை
யார் நிரப்பினாலும்
உன் இடத்தை யாராலும்
நிரப்ப முடியாது அப்பா

என் குறும்புகள் இரசித்தாய்
குழப்பங்கள் தீர்த்தாய்
தவறுகள் திருத்தினாய்
திறமைகள் உணர்த்தினாய்
ஆளுமையை அனுசரித்தாய்
வெற்றிக்கு விழா எடுத்தாய்
கானலாய் கரைந்து விட்டாய்

சொப்பனத்தில் மட்டுமே
உன்னை காண முடிகிறது
சொற்ப நேரத்தில்
கலைந்து விடுகின்றாய்
இரக்கமற்ற இரவு நீண்டு விடுகின்றது

நீ இன்றி மட்டும் தான் நகர்ந்து கொண்டு இருக்கின்றேன் அப்பா
உன் நினைவின்றி
நகர்ந்ததே இல்லை என் நாட்காட்டி
நீயோ என் திசைகாட்டி
சென்றுவிட்டாய் அத்தனையும் வழிகாட்டி

ஆயிரம் ஆயிரம் கவிதைகள் எழுதினாலும் தந்தையே
உன் அன்பை காட்ட சரியான வார்த்தைகள் அமையவில்லை என்னிடத்தில்
எவருமே காட்ட முடியாத
அத்தனை அன்பையும்
நீ சுமந்து நிற்கின்றாய்
உன்னிடத்தில்….

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

என் முற்றத்து முருங்கை மரம்

என் மொத்தமும் நீயே!