in

AngryAngry LOLLOL LoveLove

என் மொத்தமும் நீயே!

Loving father walking side by side with son holding hands.

-கவிதாயினி: திருமதி நதீரா வசூக், (ஆசிரியை)
தல்கஸ்பிடிய முஸ்லிம் மஹா வித்தியாலயம், தல்கஸ்பிடிய,
அறநாயக்க-

அன்னைக்கு ஈடாக
ஆளாக்கும் தந்தை
தாயென்று சொல்ல
கருவறை மட்டும்தான்
உனக்கில்லை அப்பா……
உலகமே நீ தானே
என்னுயிரும் நீ தானே

தன்னை மறப்பாய்
உறக்கம் தொலைப்பாய்
தன் வயிற்றிலே
சுமக்காது விட்டாலும்
தன் நெஞ்சிலே சுமப்பாய்
காலமெல்லாம் நீ தானே
காவலாய் இருப்பாயே
பாடுபட்டே உழைப்பாய்
பங்குபோட்டுக் கொடுப்பாய்

சோதனைகள் வேதனைகள்
எதுவந்த போதும்
தோள் கொடுக்கும் தோழன் நீயல்லவா.?
வாழ்க்கையெனும் சக்கரத்தில்
வசதியாய் வாழ்வதற்கு
ஓயாமல் சுழலும்
அன்புச் சக்கரம்
நீ தானே அப்பா..

மழலையில் கரம்பிடித்து
என் கனவுகளை சுமந்து
வாழ்க்கைப் பாதைக்கு
அழைத்துச் செல்வதும்
கனிவான கண்டிப்பும்
மறைமுக பாசமும்
கொடுத்திடும் உறவே
நீ தானே அப்பா

வாழ்வோடு கலந்த
தந்தையின் பாசமும்
தரணியெங்கும் பேசும்
மழலையின் சிரிப்பில்
மனதைத் தொலைத்து
வாழ்க்கையைப் பிள்ளைக்காய்
அர்ப்பணிக்கும் நேசமும்
கொண்டவன் நீ தானே அப்பா…!

நீயில்லை யென்றாலே
நானிங்கு இல்லை
வாழ்க்கைக்கு வரமே
நீ தானே அப்பா..
உயிருக்கு உயிராக
உறவுக்கு உறவாக
கூடவே பயணிக்கும்
ஒரே ஜீவன் நீயே
என்றால் மிகையாகாது அப்பா
என் மொத்தமும் நீ தானே அப்பா!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

என் மொத்தமும் நீயே!…

பிறைநிலா ஊடக வலையமைப்பின் ஆறாவது ஆண்டு பூர்த்தியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.