in

LoveLove CuteCute CryCry

பிறைநிலா ஊடக வலையமைப்பின் ஆறாவது ஆண்டு பூர்த்தியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

-சப்ராஸ் அபூபக்கர்-

பிறைநிலா ஊடக வலையமைப்பின் ஆறாவது ஆண்டுப் பூர்த்தி விழாவும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று 2022.06.25 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியது.

பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசமான்ய, தேசபந்து, கலாநிதி அல்ஹாஜ் ரயீஸ் மீரா கலந்து சிறப்பித்திருந்தார். விஷேட அதிதியாக அக்குரணை AIDA CARS PVT. LTD பணிப்பாளர் ஹனீப் ஹாஜியாரும், கௌரவ அதிதிகளாக குருநாகல் FN GROUPS PVT LTD. நிறுவன பணிப்பாளர் பஸ்மின் இல்யாஸ் மற்றும் அஸ்மா ட்ரவல்ஸ் நிறுவன உரிமையாளர் அஷ்ஷேக் ரிஹின் (நளீமி) அவர்களும் சிறப்பதிதிகளாக குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்க உறுப்பினர்களும், சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்பாஸ் முஹமட் (வசந்தம் FM) கலந்து சிறப்பித்திருந்தனர்.

பிறைநிலா ஊடக வலையமைப்பு நடாத்தியிருந்த தங்கக்குரல் தேடல், பாடுவோர் பாடலாம், அதான் போட்டி, கிராஅத் போட்டி, செய்தி வாசித்தல் போட்டி போன்றவற்றில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை பிறைநிலா ஊடக வலையமைப்பின் 2022, 2023 ம் ஆண்டுக்கான உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதமும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது. நாட்டில் நிலவும் கடுமையான போக்குவரத்து பிரச்சினையிலும் சுமார் 200 க்கு மேற்பட்ட பிறைநிலா அபிமானிகள் நாடு பூராகவும் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இந்த நிகழ்வுகளை சக்தி FM அறிவிப்பாளர் RJ சௌகி தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

என் மொத்தமும் நீயே!

ஏழை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கும் சலுகை