in

AngryAngry LoveLove

இனி விடுமுறை இல்லை

வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் இயங்காது என வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தை வழமைப் படுத்துவதை கருத்திற் கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிக்கு சமூகமளிப்பதில் அரச துறை ஊழியர்கள் எதிர்நோக்கிய சிரமங்கள் காரணமாக இந்த சுற்றறிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பணியைத் தொடரவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருளுக்கான QR அமைப்பில் வெற்றிகரமான வாக்குகள் பதிவாகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். – NW-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

32 வயதுப் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு பதவிப் பிரமாணம்